அரசியல் சட்டத்தை ஆளுநர் புரிந்து நடந்து கொண்டால் யாருக்கும் பிரச்னை இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (அக்.16) உங்களின் ஒருவன் என்ற தலைப்பில் கேள்வி பதில் வாயிலான காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் காணொலியில் பல்வேறு வகையான பிரச்னைகள் குறித்து பேசியுள்ளார்
அப்போது ஆளுநருக்கு உரிய அதிகாரங்கள் குறித்தும் பேசினார். இது குறித்து மு.க. ஸ்டாலின் பேசுகையில், ‘ஆளுநருக்கு உரிய பொறுப்புகள், அதிகார வரம்புகள் என்ன என்பதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு உரிய அதிகாரங்கள், பொறுப்புகள் என்ன என்பதையும் அரசியலமைப்பு சட்டம் தெளிவாக கூறுகிறது.
அதனை ஆளுநர் புரிந்து நடந்துகொண்டால் யாருக்கும் பிரச்னை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்என். ரவிக்கும், ஆளுங்கட்சியான திமுகவுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்றுவருகிறது. கடந்த வாரம் ஆளுநர் திராவிடம் என்பது தமிழருக்கு மட்டுமான அடையாளம் கிடையாது.
அது தெற்கே உள்ள தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகள் பேசும் மக்களை உள்ளடக்கியது. ஆனால் தமிழ்நாட்டில் தமிழர்தான் திராவிடர் என்ற கருத்து பரப்பப்படுகிறது எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் மு.க. ஸ்டாலின் இன்றைய கேள்வி பதில் காணொலியில் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil