scorecardresearch

நேரில் பார்க்க ஆசைப்பட்ட கிராமத்து மாணவி… கார் அனுப்பிய முதல்வர்

மாணவிக்குப் பட்டப் படிப்பிற்கான புத்தகங்கள், புத்தகப்பை, கல்வி உபகரணங்கள் மற்றும் நிதியுதவி வழங்கி, வாழ்த்தினார்.

நேரில் பார்க்க ஆசைப்பட்ட கிராமத்து மாணவி… கார் அனுப்பிய முதல்வர்

மதுரை மாவட்டம், திருவேடகம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஷோபனா, தான் கல்லூரி சேர்ந்து படிப்பதற்கு பண வசதியில்லாமல் ஏழ்மை நிலையில் இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த மாணவியின் கடிதத்தைப் பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், அவர் மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் பிபிஏ படிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த ஷோபனா, தனக்கு உதவிய முதல்வரை சென்னையில் நேரில் வந்து சந்தித்து நன்றி தெரிவிப்பதற்கு தன்னிடம் பண வசதி இல்லை என மீண்டும் கடிதம் வாயிலாகத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்நிலையில், தேவர் ஜெயந்தி, பல்வேறு அரசுத் திட்டப் பணிகளின் ஆய்வுகளுக்காக நேற்று மதுரை வந்த முதல்வர் மு.க ஸ்டாலின், மாணவி ஷோபனாவை சந்திக்க விரும்பியுள்ளார்.

உடனடியாக, வாகனத்தை திருவேடகம் கிராமத்திற்கு அனுப்பி வைத்து, மாணவி செல்வி ஷோபனா மற்றும் அவரது பெற்றோரை மதுரை அரசு விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்துக் கலந்துரையாடினார்.

மாணவிக்குப் பட்டப் படிப்பிற்கான புத்தகங்கள், புத்தகப்பை, கல்வி உபகரணங்கள் மற்றும் நிதியுதவி வழங்கி, வாழ்த்தினார். மாணவியும் தனது ஆசைப்படியே நேரில் முதல்வருக்கு நன்றி கூறினார். இந்நிகழ்வின் போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி உடன் இருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Cm mk stalin sent his car to meet village girl in madurai

Best of Express