83,000 பேருக்கு வேலை; ரூ17,000 கோடிக்கு புதிய தொழில்கள்: ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் பேசிய, முதலமைச்சர் மு.கஸ்டாலின் “இந்த புதிய திட்டங்கள் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 83432 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்று கூறினார்.

CM MK Stalin signs with 35 MOUs, CM MK Stalin signs with new MOUs, 83,000 பேருக்கு வேலைவாய்ப்பு, ரூ17000 கோடிக்கு புதிய தொழில்கள், புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் முக ஸ்டாலின், 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு' rs 17 thousand crore investments, 83 thousand employments, tamil nadu, industries innvestment

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு’ விழாவில் 83,000 பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் ரூ.17,000 கோடி மதிப்பிலான புதிய தொழில்கள் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 20) ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு’ விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மை செயலாளா் முருகானந்தம், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூஜா குல்கா்னி உள்ளிட்ட உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்களின் முதல் முகவரி நிகழ்ச்சியில், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம், 55,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், கேப்பிட்டல் லாண்ட், அதானி, ஜே.எஸ்.டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதில், ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

மேலும், இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.4,250 கோடி மதிப்பில் 9 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதோடு, ரூ.7,117 கோடி மதிப்பிலான 5 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.

‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் பேசிய, முதலமைச்சர் மு.கஸ்டாலின் “இந்த புதிய திட்டங்கள் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 83432 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்று கூறினார்.

இதையடுத்து பேசிய, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாட்டின் கலை, பண்பாடு மிகவும் தொன்மையானது நம்பிக்கையூட்டும் எதிர்காலத்தை அளித்து வந்துள்ளது. தமிழ்நாடு போட்டியென்பது வாழ்வின் அனைத்து பக்கங்களிலும் எழுதப்படாத சட்டமாகவுள்ளது” என்று கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் தொழில்துறையை மேலும் வளர்சியை நோக்கி அழைத்துச் செல்லும் விதமாக ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளார். இதன் மூலம், தமிழ்நாட்டில் புதியதாக 83,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cm mk stalin signs with new mous to investments about rs 17 thousand crore

Next Story
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com