முதல்வர் தனிப்பிரிவுக்கு திடீரென வந்த மு.க ஸ்டாலின்; பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென முதல்வர் தனிப்பிரிவுக்கு யாரும் எதிர்பாராத வகையில் திடீரென நடந்து வந்து ஆய்வு செய்தார். அப்போது, அவர் பொதுமக்களிடம் முதல்வர் தனிப்பிரிவு மனுக்கள் பெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

cm mk stalin, cm mk stalin visits cm cell, முதலமைச்சர் முக ஸ்டாலின், முதல்வர் தனிப்பிரிவு, திமுக, tamil nadu, chennai, mk stalin, dmk

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக அளிக்கும் வகையில் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு தொடங்கப்பட்டது. இதற்காக இணையதளம் தொடங்கப்பட்டு இணையம் வாயிலாகவும் புகார் அளிக்க வழிவகை செய்யப்பட்டது. மேலும், பொதுமக்களிடம் இருந்து நேரடியாக புகார்களை பெறும் வகையில், உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற தனிப்பிரிவு உருவாக்கப்படும் என்று திமுக தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த முதலமைச்சர் தனிப்பிரிவு சேவை உருவாக்கப்பட்டது.

முதலமைச்சரின் தனிப்பிரிவு சென்னையில் தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கே நாள்தோறும் பொதுமக்கள் நேரில் வந்து தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென முதல்வர் தனிப்பிரிவுக்கு யாரும் எதிர்பாராத வகையில் திடீரென நடந்து வந்து ஆய்வு செய்தார். அப்போது, அவர் பொதுமக்களிடம் முதல்வர் தனிப்பிரிவு மனுக்கள் பெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அங்கே மனு கொடுக்க வந்த ஒரு பெண் தனது கோரிக்கையை சொல்லி கையெடுத்து கும்பிட்டு கண்ணீருடன் மனுகொடுத்தார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நீங்கள் 100 வயது வரை இருகணும் என்று கூறினார்.

முதல்வர் தனிப்பிரிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென வருகை தந்து ஆய்வு மேற்கொண்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cm mk stalin suddenly visits cm cell in secretariate and speaks with public

Next Story
‘என் மரணத்திற்கு அஜித் தான் காரணம்’ – செல்ஃபி சர்ச்சையில் சிக்கிய பெண்ணின் வைரல் வீடியோ!Woman tried to put fire on herself in front of actor Ajith house Viral Video Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X