/indian-express-tamil/media/media_files/2025/03/26/zSxSOKfm1GXmd6jqVLYT.jpg)
இயக்குநர் பாரதிராஜா மகன் நடிகர் மனோஜ் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, கதறி அழுத பாரதிராஜாவைப் பார்த்து அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) உயிரிழந்தார். அவருக்கு வயது 48. நடிகர் மனோஜ்ஜின் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுதியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டில் மனோஜின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதலமைச்சர் வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின்னர், பாரதிராஜாவைப் பார்த்துப் பேசினார். அப்போது கதறி அழுத பாரட்திராவை கைகளைப் பிடித்துக்கொண்டு ஆறுதல் கூறினார்.
திரைப்பட நடிகரும் - இயக்குநர் இமயம் பாரதிராஜா சாரின் அன்பு மகனுமான சகோதரர் மனோஜ் கே.பாரதி அவர்கள், உடல்நலக்குறைவால் மறைந்த நிலையில், நீலாங்கரையில் உள்ள அவர்களது இல்லத்துக்கு சென்று, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுடன், மனோஜின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை… pic.twitter.com/TJk47G05cr
— Udhay (@Udhaystalin) March 26, 2025
இது குறித்து துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: “திரைப்பட நடிகரும் - இயக்குநர் இமயம் பாரதிராஜா சாரின் அன்பு மகனுமான சகோதரர் மனோஜ் கே.பாரதி , உடல்நலக்குறைவால் மறைந்த நிலையில், நீலாங்கரையில் உள்ள அவர்களது இல்லத்துக்கு சென்று, முதல்வருடன், மனோஜின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். அவரைப்பிரிந்து வாடும் பாரதிராஜா சார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்தோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.