Advertisment

இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையம் சென்னையில்: சிகாகோவில் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைத்திட சிகாகோவில் உள்ள அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.

author-image
WebDesk
New Update
stalin us mou

Mk Stalin in Chicago

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் அரசு அதிகாரிகளும் சென்றுள்ளனர்.

Advertisment

முதற்கட்டமாக கடந்த ஆக.29-ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் உலக முதலீட்டாளர்களை சந்தித்தார். இதில் நோக்கியா உள்ளிட்ட 8 நிறுவனங்களுடன் 4,600 பேருக்கு வேலையளிக்கும் வகையில் ரூ.1,300 கோடிக்கான முதலீட்டுக்கு ஒப்பந்தங்கள் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர், சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ புறப்பட்டுச் சென்றார். அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கவுள்ளார்.

இதனிடையே, இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைத்திட சிகாகோவில் உள்ள அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.

அஷ்யூரன்ட் நிறுவனம் (Assurant, Inc.) பார்ச்சூன் 500 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றாகும், இந்நிறுவனம் அட்லாண்டாவை தலைமையிடமாக கொண்டு இடர் மேலாண்மை தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது.

சொத்து, விபத்து, நீட்டிக்கப்பட்ட சாதனங்களின் பாதுகாப்பு போன்ற பலவிதமான சிறப்பு மற்றும் முக்கிய சந்தை காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி வருகின்றன. இந்நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகம் அமெரிக்க நாட்டின் அட்லாண்டாவில் அமைந்துள்ளது.

இதுதவிர, ஈட்டன் நிறுவனத்திற்கும் தமிழக அரசிற்கும் இடையே, 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் தற்போதுள்ள ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை (Global Utility Engineering Centre) நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஈட்டன் கார்ப்பரேஷன் (Eaton Corporation) நிறுவனம் என்பது தரவு மையம், பயன்பாடு, தொழில்துறை, வணிகம், இயந்திர கட்டிடம், குடியிருப்பு, விண்வெளி மற்றும் இயக்க சந்தைகளுக்கான உற்பத்தி மற்றும் பகிர்மான பணிகளை மேற்கொள்ளும் மேலாண்மை நிறுவனமாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment