scorecardresearch

மு.க. ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் வயது முதிர்வு காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மனைவியும் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள். இவர் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்டுள்ள உடல் நலக் குறைவுக்கு சென்னை கோபாலபுரம் இலத்திலேயே சிகிச்சை பெற்று வந்தார். தயாளு அம்மாள் முதுமையால் ஏற்படும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவப் பரிசோதனைக்காகவும் சிகிச்சைக்காகவும் அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

இந்நிலையில், தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவப் பரிசோதனைக்காகவும், சிகிச்சைக்காகவும் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் ம்மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாளின் உடல்நிலை, சிகிச்சை குறித்து மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Cm mk stalins mother dayalu ammal hospitalized in chennai