மதுரை பன்னாட்டு விமான நிலையம் முதல் பேரிடர் நிவாரண நிதி வரை: மோடியிடம் ஸ்டாலின் வைத்த முக்கிய கோரிக்கைகள்!
'மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே வைக்கப்பட்ட கோரிக்கையை பிரதமர் பரிசீலிக்க வேண்டும்' என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
CM MK Stalin | PM Modi: ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisment
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பாக பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை விடுத்தார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய பின்வருமாறு:-
தொட்ட துறை அனைத்திலும் சிகரத்தை தொட்ட மாநிலம் தமிழ்நாடு தான். திருச்சி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி.
மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே வைக்கப்பட்ட கோரிக்கையை பிரதமர் பரிசீலிக்க வேண்டும்.
சென்னை-பினாங், சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை முன்னுரிமை அடிப்படையில் தொடங்க வேண்டும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசின் பங்குப் பகிர்வு நிதியை உடனடியாக வழங்க வேண்டும். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அவசியத் தேவைகளை செய்துதரும் முக்கிய கடமை மாநில அரசுக்குதான் உள்ளது.
இருவழிச் சாலையாக மேம்படுத்தப்படும் நெடுஞ்சாலைகளுக்கு சுங்கக் கட்டம் வசூலிக்கப்படுத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
சென்னை, தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை இயற்கை பேரிடராக அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழக அரசின் கோரிக்கை என்பது அரசியல் முழக்கம் அல்ல; மக்களுக்கான முழக்கம்.