டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல்வர் பழனிசாமி, கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளதால் என்னுடைய பொறுப்புகள் அதிகமாகியுள்ளன என்று கூறினார்.
டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் 28-வது பட்டமளிப்பு விழா அதன் நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமையில் சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. இந்த விழாவுக்கு ஏ.சி.எஸ்.அருண்குமார் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இந்த பட்டமளிப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாழ்க்கை வரலாறு குறித்து வீடியோ காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கவுரவ டாக்டர் பட்டம் பெற்றபின் பேசிய முதல்வர் பழனிசாமி, “மாணவர்கள் ஏட்டுக்கல்வியுடன், வாழ்க்கை கல்வியையும் கற்க வேண்டும்.6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். கவுவர டாக்டர் பட்டம் பெற்றுள்ளதால் என்னுடைய பொறுப்புகள் அதிகமாகியுள்ளன” என்று குறினார்.
டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இன்றைய விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி, கங்கா ஆஸ்பத்திரியின் தலைவர் எஸ்.ராஜசபாபதி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகை ஷோபனா ஆகியோருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.