இடைத்தேர்தல் வெற்றி உண்மைக்கு கிடைத்த வெற்றி – முதல்வர் பழனிசாமி

CM Palanichami speech : அதிமுகவுக்கு மக்கள் மகத்தான வெற்றியை வழங்கியுள்ளனர். நாங்கள் எப்போதுமே உண்மையை கூறிவருகிறோம். திமுகவின் பொய்யை மக்கள் தெரிந்துகொண்டதால் 2 தொகுதிகளிலும் அதற்கு தோல்வியை மக்கள் பரிசாக வழங்கியுள்ளனர்.

Nanguneri, Vikravandi Assembly Election Results 2019 Live
Nanguneri, Vikravandi Assembly Election Results 2019 Live

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி, உண்மைக்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது, இந்த இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி, உண்மைக்கு கிடைத்த வெற்றி. இந்த தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிமுகவுக்கு மக்கள் மகத்தான வெற்றியை வழங்கியுள்ளனர். நாங்கள் எப்போதுமே உண்மையை கூறிவருகிறோம். திமுகவின் பொய்யை மக்கள் தெரிந்துகொண்டதால் 2 தொகுதிகளிலும் அதற்கு தோல்வியை மக்கள் பரிசாக வழங்கியுள்ளனர்.

விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவின் வெற்றி தொடரும். மற்ற கட்சிகளுடன் அதிமுக அமைத்துள்ள இந்த கூட்டணி, வருங்காலத்திலும் தொடரும் என்று அவர் மேலும் கூறினார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cm palanichami speaks about victory in vikkiravandi and nanguneri bypoll

Next Story
தீபாவளிக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கு 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…Diwali 2019 special buses
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com