/tamil-ie/media/media_files/uploads/2019/08/eccc.jpg)
CM palanichamy, p.chidambaram, kashmir issue, article 370, finance minister, admk government, முதல்வர் பழனிசாமி, ப.சிதம்பரம், காஷ்மீர் விவகாரம், 370வது சட்டப்பிரிவு, நிதியமைச்சர், அதிமுக அரசு
காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தால் தமிழகத்துக்கு ஒரு பலனும் கிடைக்கவில்லை, அவரால் பூமிக்குத்தான் பாரம் என முதல்வர் பழனிசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது அந்த 370 சட்டப்பிரிவு நீக்க மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது.
ப.சிதம்பரத்தால் பூமிக்குதான் பாரம்! - முதல்வர் பழனிசாமி காட்டம் | #EPS#CMPalanisamypic.twitter.com/RmWXmHQ6wP
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) August 13, 2019
சிதம்பரம் விமர்சனம் : காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த கண்டன கூட்டத்தில் மாஜி நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், எந்த மசோதாவையும் முழுமையாக படித்து பார்க்காமல் ஆதரவு அளிக்கிறது அதிமுக அரசு. தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால் கூட அதிமுக அரசு மவுனமாக இருக்கும். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்து சேர, சோழ, பாண்டிய நாடு என பிரித்தால் மக்களின் நிலை என்ன என கேள்வி எழுப்பியிருந்தார்.
முதல்வர் பழனிசாமி கடும் தாக்கு : இந்நிலையில், மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டார். பின் அவர் பேசியதாவது, ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும் நாட்டுக்கும் என்ன கிடைத்தது. அவரால் பூமிக்குத்தான் பாரம். காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினையை தீர்த்தாரா. மத்திய அமைச்சராக இருந்த போது தமிழகத்துக்கு நிதி ஒதுக்கினாரா? அவருக்கு அவரது சுயநலன்தான் முக்கியம் என்று ப.சிதம்பரத்தை முதல்வர் பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்த நிகழ்வு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us