Advertisment

21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை! சிவச்சந்திரன், சுப்ரமணியன் உடல் நல்லடக்கம்!

சிவச்சந்திரன் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கார்குடிக்கு கொண்டு வரப்பட்டது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CM Palanisamy announced goverment job for two jawan famnilies - புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! - முதல்வர் பழனிசாமி

CM Palanisamy announced goverment job for two jawan famnilies - புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! - முதல்வர் பழனிசாமி

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்று முன்தினம் மாலை துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினான். இதில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Advertisment

இதில் இரு தமிழக வீரர்கள் பலியானார்கள். தூத்துக்குடி மாவட்டம், சவலப்பேரியைச் சேர்ந்த சுப்ரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்ற வீரரும் வீர மரணம் அடைந்தனர்.

இந்நிலையில், சிவச்சந்திரன் உடல் இன்று காலை விமானம் மூலம் திருச்சி கொண்டுவரப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பொதுமக்கள், நண்பர்கள் என பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ஆட்சியர் ராசாமணி, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பல பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து, சிவச்சந்திரன் உடல் அவரது சொந்த ஊரான அரியலூருக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த சிவச்சந்திரன் மற்றும் சுப்ரமணியம் குடும்பத்தைச் சேர்ந்த தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக, இரு வீரர்களின் குடும்பத்துக்கும் 20 லட்சம் நிதியுதவி அறிவித்திருந்த முதல்வர் பழனிசாமி, இன்று அரசு வேலை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - புல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

இதைத் தொடர்ந்து, தாக்குதலில் பலியான மற்றொரு ராணுவ வீரர் சுப்ரமணியனின் உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சுப்பிரமணியன் உடலுக்கு பொன்.ராதாகிருஷ்ணன், ஆட்சியர் நடராஜன் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெட்ரோல் பங்குகளில் இன்று இரவு 8 மணி முதல் 8:15 மணி வரை பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரமரணமடைந்த சுப்ரமணியன் உடல் அவரது சொந்த ஊரான சவலாப்பேரிக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. அங்கு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக அவருக்கு சொந்தமான இடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

வீரமரணமடைந்த சுப்ரமணியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதியம் விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து கார் மூலம் கயத்தாறு சவலாப்பேரி செல்லும் அவர் சுப்ரமணியன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்.

மேலும் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், அமைச்சர் கடம்பூர் ராஜூ, கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகளும் சுப்பிரமணியன் உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

சிவச்சந்திரன் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கார்குடிக்கு கொண்டு வரப்பட்டது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் சிவச்சந்திரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அதேபோல், மற்றொரு வீரரான சுப்ரமணியனின் உடல் தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரிக்கு கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு ஊர் மக்கள் அனைவரும் திரண்டிருந்து சுப்ரமணியன் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சுப்ரமணியன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சுப்ரமணியன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். பிறகு, சுப்ரமணியனின் சொந்த நிலத்தில், 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment