பொங்கல் பரிசாக ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ 2500: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழக முதல்வர் ஆக வேண்டும் என்று ஒருநாளும் நான் எண்ணியது கிடையாது. முதலமைச்சர் என்ற பதவி  கடவுள் அருளால் தமக்கு கிட்டியது

By: Updated: December 19, 2020, 05:41:52 PM

தமிழர் பண்டிகயைான பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது.  தொடர்ந்து 3 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும் இந்த பண்டிகைக்கு ஆண்டுதோறும் அரசு தரப்பில் ஒவ்வொரு குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 2500 வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தை சொந்த தொகுதியான எடப்பாடியில் இன்று தொடங்கினார்.  .

சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டியில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கிவைத்த முதல்வர், 2021 தமிழக சட்டபேரவை தேர்தலுக்கான முதல் பரப்புரையை எடப்பாடி தொகுதி சென்றாய பெருமாள் கோவிலில் இருந்து இன்று துவங்குகிறார்.

தேர்தல் பிரச்சார உரையில் பேசிய முதல்வர், ” கடந்த 43 ஆண்டுகளாக எடப்பாடி சட்டமன்றத் தொகுதியை அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளும் தான் வெற்றி பெற்றது. எடப்பாடி தொகுதியில் 1977-ல் இருந்து திமுக ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. எடப்பாடி தொகுதி அதிமுக வின் எஃகு கோட்டை” என்று தெரிவித்தார்.

மேலும், தமிழக முதல்வர் ஆக வேண்டும் என்று ஒருநாளும் நான் எண்ணியது கிடையாது. முதலமைச்சர் என்ற பதவி  கடவுள் அருளால் தமக்கு கிட்டியது என்றும் தெரிவித்தார்.

மினி கிளினிக் துவக்க விழாவில் பேசிய முதல்வர், ” தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படும் 11 அரசு மருத்துவக்கல்லூரிகளில் அடுத்த ஆண்டு 1,650 இடங்கள் தோற்றுவிக்கப்படும். அடுத்த ஆண்டு சுமார் 435 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, திமுக எம்.பி. கனிமொழி 2021ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் இருந்து தொடங்கினார். தேர்தல் பரப்ப்புரையில் பேசிய அவர், “கடந்த தேர்தல் பரப்புரையின் போது, எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி,  ஜவுளி பூங்கா கொண்டு வருவதாக  தற்போதைய முதல்வர் பழனிசாமி  வாக்குறுதி அளித்தார். ஆனால், எதுவும் நிறைவேற்றப்படவில்லை” என்று சுட்டிக்காட்டினார்.

தமிழககத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை அடுத்த ஆண்டு ஜனவரியில் முறையாகத் தொடங்க உள்ளார். அதற்கு முன்னதாக, 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சார முன்னோட்டமாக திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், காணொலிக்

காட்சி மூலமாக ‘தமிழகம் மீட்போம்!’ எனும் தலைப்பிலான ‘2021-சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சிறப்புப் பொதுக்கூட்டங்கள் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Cm palanisamy begins election campaign for 2021 tn assembly election

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X