ஆந்திராவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழர்களின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி : முதல்வர் அறிவிப்பு!

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்

ஆந்திரா மாநிலம், கடப்பா அருகில் உள்ள ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட, 5 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம்,  ஒண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள ஏரி ஒன்றில்  கடந்த ஞாயிறு (18.2.18) அன்று, 5 சடலங்களை மிதந்தனர். தகவலறிந்து சம்பவடத்திற்கு சென்ற ஆந்திரா காவல் துறையினர் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்பு நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் 5 பேரும்  சேலம் மாவட்டம் கரியக்கோவில் மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, சேலம் மாவட்ட போலீசார் ஆந்திரா விரைந்தனர். அதன் பின்பு, அவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டன.  உயிரிழந்தவர்களின்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்களின் குடும்பத்தார்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், ஆந்திராவில் உயிரிழந்த தமிழர்கள் 5 பேரின் குடும்பத்திற்கு தலா.  3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுக் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம், ஒண்டமேட்டா வனப்பகுதியில் உள்ள ஏரி ஒன்றில், சேலம் மாவட்டம், கரியகோவில் சரகம், அடியனூர் கிராமம், கீரங்காட்டைச் சேர்ந்த கருப்பண்ணன், ஜெயராஜ், சின்னபையன், சின்னதம்பி மகன் முருகேசன் மற்றும் அண்ணாமலை மகன் முருகேசன் ஆகிய ஐந்து நபர்களின் சடலங்கள் ஆந்திரா மாநில காவல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் உடல்களை தமிழ்நாடு அரசின் சார்பில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளை செய்யவும், இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளவும் காவல் துறையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு பிரேத பரிசோதனை முடிப்பதற்காக கடப்பா ரிம்ஸ் அரசு மருத்துவமனைக்கு சேலம் மாவட்ட காவல் துறை ஆய்வாளர் தலைமையில் தனிப்படை ஒன்று ஆந்திரா மாநிலத்திற்கு உடனடியாக செல்லும்படி உத்தரவிட்டுள்ளேன்.இந்த துயரச் சம்பவத்தின் தன்மையையும், இறந்தவர்களின் குடும்ப வறிய நிலையையும் கருத்தில் கொண்டு, சிறப்பினமாக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

×Close
×Close