கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி பகுதியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, புயலால் பாதிக்கப்பட்ட வாழைத் தோப்புகளை முதல்வர் பழனிசாமி பார்வையிட்டார்.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி – மரக்காணம் இடையே நேற்று (நவம்பர் 25) இரவு 11 மணிக்கு கரையைக் கடக்கத் தொடங்கி அதிகாலையில் முழுவதுமாக கரையை கடந்தது. நிவர் புயல் கரையக் கடக்கத் தொடங்கியபோது, அதன் வெளிச்சுற்று கடலூரைத் தொட்டுவிடும் நிலையில் இருந்தது. அதனால், கடலூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது.
புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி மரக்காணம் உள்பட சில பகுதிகளில், மணிக்கு 120 முதல் 140 கி.மீ. வரையில் பலத்த காற்று விசியதுடன் கனமழையும் பெய்தது. அதே போல, சென்னையிலும் பலத்த காற்று வீசியது.
நிவர் புயலால், புயல் காற்று மற்றும் கன மழை காரணமாக கடலூர்,
இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி இன்று (நவம்பர் 26) காலை சென்னையிலிருந்து கடலூர் மாவட்டத்துக்கு சாலை வழியாக பிற்பகலுக்கு சென்றடைந்தார். முதல்வர் பழனிசாமி, கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி பகுதியில் உள்ள குமாரமங்கலத்தில், புயல் காற்றில் சாய்ந்து போன வாழை மரங்களை நேரில் பார்த்து, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
முதல்வர் பழனிசாமியுடன், அமைச்சர் எம்.சி. சம்பத், மாவட்ட ஆட்சியர், மற்றும் வேளாண் துறை செயலாளர் உள்ளிட்டோரும் இருந்தனர். முதல்வர் பழனிசாமி ரெட்டிச்சாவடி பகுதியில் புயலால் சாய்ந்து சேதமடைந்திருந்த வாழைத் தோப்புகளுக்குள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“