திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விருந்தினர் மாளிகையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசினார்,
முதல்வர் எடப்பாடி திருப்பதி பயணம்:
குடும்பத்துடன் திருப்பதி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று குடும்பத்துடன் சாமியை தரிசனம் செய்தார். முன்னதாக அவர், திருமலையிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணா விருந்தினர் மாளிகைக்குச் சென்றார்.ங்கு தேவஸ்தான அதிகாரிகள் அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் ஆந்திர மாநில போலீசார் சார்பில் அளிக்கப்பட்ட மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார்.
இரவு 7 மணிக்கு வராக சுவாமி கோயிலிலும், ஹயக்ரீவர் கோயிலிலும் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். இரவு திருமலையில் தங்கிய அவர், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலையில் நடைபெறும் வாராந்திர சேவையான அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
முதல்வர் எடப்பாடி, வெங்கையா நாயுடு சந்திப்பு
இதற்கிடையே, விருந்தினர் மாளிகையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் தங்கியிருப்பதை அறிந்த முதல்வர் பழனிசாமி, அவருடைய அறைக்கு சென்று சந்தித்து பேசினார்.