இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் நேற்று (டிச.26) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக் குறைவு, வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உலகத் தலைவர்களும் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலுக்கு நாளை இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று (டிச.27) டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை நிறைவேற்றியவர். 100 நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்த காரணமாக இருந்தவர் மன்மோகன் சிங். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த நாட்டிற்கே பேரிழப்பு என்றார்.