scorecardresearch

சட்டமன்றத்தில் புகழ் பாடக் கூடாது.. கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க. ஸ்டாலின் உத்தரவு

சட்டமன்றத்தின் இன்று பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற உள்ள நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் யாரும் விணாக புகழ வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்

சட்டமன்றத்தின் இன்று பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற உள்ள நிலையில் திமுக  எம்.எல்.ஏக்கள் யாரும் விணாக புகழ் வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை திங்கள்கிழமை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து நேற்றைய தினத்தில் வேளாண்துறை  சார்பாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று முதல்வர் கூறினார். எதிர்கட்சிகள் என்றால் விமர்சிக்கத்தான் செய்வார்கள் என்று அப்போது திமுக எம்.எல்.ஏக்கள் எல்லை தாண்டி பேசக்கூடாது என்று முதல்வர் கூறினார். மேலும் மூத்த எதிர்கட்சித் தலைவர்கள், எதிர்கட்சி தலைவர்களுக்கு பதில் கூறுவார்கள் என்றும் ஸ்டாலின் கூறினார்.

சட்டமன்றத்தின் நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும் என்ன பேச வேண்டும் என்பதை தெளிவாக பேச வேண்டும். மேலும் சட்டப்பேரவையில் தேவையற்ற புகழ்ச்சி வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Cm stalin advice to dmk mla dont praise dmk govt