சிந்துவெளி பணிக்கான எழுத்து முறையை எளிதாக புரிந்து கொள்ள உதவும் வகையில், அதை வெளிக் கொண்டு வரும் தொல்லியல் அறிஞர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிந்துவெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் பன்னாட்டு கருத்தரங்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், "சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்; ஒரு வடிவியல் ஆய்வு" என்ற நூலையும் முதலமைச்சர் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, சர் ஜான் மார்ஷல் சிலை அமைக்க காணொளி காட்சி வாயிலாக, ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு தொடர்பான மூன்று முக்கிய அறிவிப்புகளையும் ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி,
1. சிந்துவெளி பணிக்கான எழுத்து முறையை எளிதாக புரிந்து கொள்ள உதவும் வகையில், அதை வெளிக் கொண்டு வரும் தொல்லியல் அறிஞர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும்.
2. கல்வெட்டு ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் .
3. சிந்துவெளி நாகரிக ஆராய்ச்சி மேற்கொள்ள தலை சிறந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் பெயரில் ஆய்வறிக்கை அமைக்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.