CM Stalin asked about Communist leader N Sankaraih health status: கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவின் உடல்நிலை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான என்.சங்கரய்யாவுக்கு கடந்த இரண்டு நாட்களாக லேசான காய்ச்சல் இருந்தது. இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில், சங்கரய்யாவின் உடல்நிலை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசி வாயிலாக கேட்டறிந்தார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நலமுடன் உள்ளார்.
தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு இரண்டு தினங்களாக லேசான காய்ச்சல் இருந்த காரணத்தினால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இன்று மதியம் அவருக்கு அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரிய வந்தது. அவரை உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு ஆக்ஸிஜன் லெவல் மற்ற அனைத்தும் வழக்கம் போலவே உள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனை டீன் தேரணிராஜன் மற்றும் மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.
அவரை கவனித்துக் கொள்ள தனி மருத்துவ குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்புகொண்டு தெரிவித்தார். மேலும், என்.சங்கரய்யாவின் உடல் நலம் குறித்தும் முதல்வர் கேட்டு அறிந்தார். அவருக்கு விவரங்களை தெரிவித்துள்ளேன் மேலும் சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தமைக்கு நன்றியும் தெரிவித்துள்ளேன். என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil