குடியரசு தினவிழாவையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
குடியரசு தினவிழாவையொட்டி, இன்று நடைபெற்ற தேநீர் விருந்துக்கு தமிழக முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் மற்றும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இதையும் படியுங்கள்: கால தாமதமாக தேசியக் கொடியேற்றம்: மன்னிப்பு கேட்ட தமிழிசை
ஆளுநரின் சமீபத்திய செயல்பாடுகள் காரணமாக தி.மு.க கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தைப் புறக்கணித்துள்ளன.
Republic Day Special Price | This limited offer gives you an annual subscription at Rs 999 along with added benefits. Click to see offer
இந்தநிலையில், தேநீர் விருந்தில் கலந்துக் கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைப்பேசியில் அழைப்பு விடுத்தார். மேலும், ஆளுநரின் செயலாளர் முதல்வரிடம் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார்.
இந்தநிலையில், இன்று மாலை நடைபெற்ற தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கட்சிகளும் இந்த தேநீர் விருந்தில் கலந்துக் கொண்டன.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பங்கேற்ற தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவருடன் கைகுலுக்கி உரையாடினார்.
இந்த நிகழ்வில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவும் கலந்துக் கொண்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil