/indian-express-tamil/media/media_files/PHZKl6BZk3yJUB7kZSnN.jpg)
Tamil nadu
முதல்வர் ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசிய வழக்கில், பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலனை போலீசார் இன்று கைது செய்தனர்.
கடந்த 1ஆம் தேதி, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூரில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பெரவள்ளூர் போலீசார், இன்று காலையில், வியாசர்பாடியில் உள்ள கபிலனின் வீட்டில் வைத்து அவரை கைது செய்தனர்.
கபிலன் கைது சம்பவத்தையறிந்த பாஜகவினர் அப்பகுதியில் கூடினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியது.
இதனிடையே, கபிலன் கைதுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாஜக சமூக வலைதள பிரிவு மாநில தலைவர் பாலாஜி X பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "இன்று அதிகாலை தமிழக பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.கபிலன் அவர்கள் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனநாயகத்தை நசுக்கும் இது போன்ற நடவடிக்கைகளை கண்டிக்கிறோம்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.