/tamil-ie/media/media_files/uploads/2022/12/whatsapp-image-2022-03-31-at-2-34-25-pm_710x400xt.jpg)
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் (100) இன்று காலை வயது முதிர்வு உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இந்நிலையில், தாயை இழந்த பிரதமருக்கு ஆறுதல் தெரிவிக்க தமிழக முதல்வர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குஜராத் செல்ல உள்ளனர்.
மோடியின் தாயார் ஹீராபென் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநிலத்தின் முதல்வர்கள் இரங்கல் செய்தியை வெளியிட்டனர். இந்நிலையில் குஜராத் மாநிலம் காந்திநகரில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழக முதல்வர் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவு செய்தார். அதேபோல், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவருடன் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோர் செல்கின்றனர். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.