Tamilnadu Assembly - CM MK Stalin - RN Ravi tamil news: 2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இந்தாண்டுக்கான கூட்டம் தொடங்கியது.
Advertisment
சட்டமன்ற வளாகத்தில் ஆளுநருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், சட்டப்பேரவை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கியது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்காதது வருந்தத்தக்கது என்றும் உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்றும் சட்டப்பேரவையில் ஆளுநர் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
Advertisment
Advertisements
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "திராவிட மாடல் மட்டுமின்றி பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கலைஞர் பெயர்களையும் ஆளுநர் படிக்காமல் புறக்கணித்தார். அச்சடிக்கப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது தவறு. உரையில் இடம் பெறாமல் ஆளுநர் சொந்தமாக சேர்த்து கொண்டவை அவை குறிப்பில் இடம் பெறாது." என்று கூறினார்.
தொடந்து பேசிய அவர், அரசு தயாரித்த, ஆளுநரால் இசைவளிக்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையை முறையாக படிக்காதது வருந்தத்தக்கது. ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன் எங்கள் எதிர்ப்பு எதையும் பதிவு செய்யவில்லை." என்றார்.
மேலும், அரசு தயாரித்து கொடுத்த உரையை முறையாக படிக்காத ஆளுநருக்கு பேரவையில் முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் பேசியதும் ஆளுநர் பாதியில் புறப்பட்டார். சட்டப்பேரவையில் அரசின் உரையில் பல பகுதிகளை தவிர்த்தற்கு, முதலமைச்சரின் கண்டனத்தை அடுத்து அவர் பாதியிலே வெளியேறினார்.