கோவை விமான நிலையத்தில் இன்று காலை 9.20 மணிக்கு சென்னையில் இருந்து வரக் கூடிய விமானத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இருவரும் ஒரே விமானத்தில் கோவை வந்தனர். முன்னதாக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.
ஆளுநர் ஆர்.என். ரவி நாமக்கல்லில் தனியார் கல்லூரியில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்ள செல்கிறார். முதல்வர் ஸ்டாலின் கோவையில் நடைபெறும் செம்மொழிப் பூங்கா அடிக்கல் நாட்டு விழா மற்றும் மக்களுடன் முதல்வர் நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
இதற்காக கோவை மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக விமான நிலையத்தில் தமிழ்நாடு ஏடிஜிபி அருண், கோவை மாநகர கமிஷனர், மேற்கு மண்டல ஐஜி, மேற்கு மண்டல டிஐஜி ஆகியோர் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“