தமிழகமே எதிர்பார்த்த அந்த அறிவிப்பு... 'மகளிர் உரிமைத் தொகை ரூ1000 செப். 15 முதல் வழங்கப்படும்'

ரூ.1000 மகளிர் உதவித் தொகை திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கும் என நிதி அமைசசர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ரூ.1000 மகளிர் உதவித் தொகை திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கும் என நிதி அமைசசர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CM Stalin has announced that the womens financial assistance scheme will be launched on September 15

மகளிர் நிதியுதவி திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும் என மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில், தி.மு.க. ஆட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதாமாதம் உரிமைத் தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.

Advertisment

இதற்கிடையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலின்போது வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்படும் என்றார்.

இந்த நிலையில் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து இன்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தத் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கும் என நிதி அமைசசர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்தத் திட்டத்தின் பயனாளிகள் யார்? யார் யாருக்கெல்லாம் திட்டத்தில் நிதி உதவி அளிக்கப்படும் என்பது குறித்து பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகமே எதிர்பார்த்த ரூ.1000 நிதி உதவி திட்டம் இன்னும் 6 மாதங்கள் கழித்து நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: