கோவை சிறைச் சாலை மைதானத்தில் செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுதல் உள்பட பல்வேறு திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.18) துவக்கி வைக்கிறார். இந்நிகழ்வில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் மக்களுக்கு வழங்கப்பட உள்ளன.
இந்நிலையில் கோவையில் அதிகாலை முதலே தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விழா நடைபெறும் சிறைச் சாலை மைதானத்தில் மழை நீரும், சேருமாக காட்சியளிக்கிறது. நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்களும் அங்கேயே அமர்ந்துள்ளனர்.
மேலும் இந்நிகழ்விற்காக ஒலி ஒளி கருவிகள் வைக்கப்பட்டுள்ள இடத்திலும் மழை நீர் தேங்கி உள்ளது. மின்சாரம் அதிகம் தேவைப்படும் இடத்தில் மழை நீர் தேங்கி இருப்பதால் மாநகராட்சி ஊழியர்கள் மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் நிகழ்ச்சியில் மழை நீரை ஊழியர்கள் வெறும் கைகளால் அள்ளி ஊற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil