திருவாரூர் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அங்குள்ள தெருக்களில் நடைபயிற்சி மேற்கொண்டு, பொதுமக்களிடம் உரையாடினார்.
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் 4 நாள் பயணமாக, முதலமைச்சர் ஸ்டாலின் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் நாகை மாவட்டம் சென்ற அவர், திருக்குவளையில் உள்ள அரசுப் பள்ளியில் குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுடன் சேர்ந்து உணவு சாபிட்டார்.
இதைத்தொடர்ந்து நேற்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்ட ஆட்சியாளர்களுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆலோசனை செய்தார்.
இந்நிலையில் திருவாரூருக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின், சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் தங்கினார். பின்னர் திருவாரூர் அருகே பவத்தர மாணிக்கத்தில் நடைபெறும் எம்.பி செல்வராஜின் மகள் திருமணத்தில் கலந்துகொள்கிறார்.
இந்நிலையில் இன்று காலை திருவாரூர் தெருக்களில் அவர் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுடன் உரையாடினார். மேலும் சிறுமி ஒருவருக்கு கைகொடுத்தார், அவருடன் செல்போனில் புகைப்படம் எடுத்துகொண்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil