Advertisment

ரூ. 158 கோடி செலவில் உருவான தகவல் தொழில்நுட்ப வளாகம்: திறந்து வைத்த முதலமைச்சர்

கோவை மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், ரூ. 158 கோடியே 32 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப கட்டடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

author-image
WebDesk
New Update
CM Stalin event


இரண்டு நாள் சுற்றுப் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisment

இதைத் தொடர்ந்து கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் ரூ. 158 கோடியே 32 லட்ச செலவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப கட்டடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ. வேலு, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கட்டடம் எல்காட் நிறுவனம் சார்பில் 3.94 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 8 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இதில், புதிய டைடல்  பார்க் செயல்படவுள்ளதாகவும், அதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய தொழில் நகரமான கோவையின் தனி அடையாளமாக இந்த டைட்டில் பார்க் திகழும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டடத்தில் இரண்டு அடித்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 150 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 120 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் உணவு அருந்தமிடம் மற்றும் பொது நிர்வாக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் இருந்து ஐந்தாம் தளம் வரை, தகவல் தொழில்நுட்ப அலுவலகத்திற்கான இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பூங்கா மொத்த 2, 94,362 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் வெளிப்புறத்தில் 160 கார் மற்றும் 150 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, பீளமேடு சுகுணா திருமண மண்டபத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு மற்றும் பேரூர் வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள நிலங்களளுக்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore CM stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment