திருவாரூர் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அங்கு கலைஞர் கோட்டம் திறப்பு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பின்னர் மாவட்டத்தில் வாய்க்கால் மற்றும் ஆறுகளில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து செய்தார்.
Advertisment
திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை நாளை (ஜூன் 20) திறந்து வைப்பதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று இரவு திருவாரூர் வருகை தந்தார். சன்னதி தெரு இல்லத்தில் தங்கியுள்ளார். இன்று (திங்கள்கிழமை) காலை சன்னதி தெரு இல்லத்திலிருந்து காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்திற்கு சென்றார். அவருடன் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் டிஆர்பி ராஜா, எம்எல்ஏ பூண்டி கலைவாணன் ஆகியோர் உடன் சென்றனர்.
கலைஞர் கோட்ட திறப்பு விழாவுக்கான முன் ஏற்பாடுகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்தார். கலைஞர் கோட்டத்தில் அமைந்துள்ள கலைஞரின் முழு உருவச் சிலையை நாளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கலைஞர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு திருவாரூரில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றவர் விளம்பம் பகுதியில் உள்ள ஓடம்போக்கி ஆற்றில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“