வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று (ஏப்ரல் 2) மாலை தி.மு.க தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு உரையாற்ற தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று கார் மூலம் வேலூர் சென்றார்.
இந்தநிலையில், வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள மு.க அழகிரி மகன் துரை தயாநிதியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன்
அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் மருத்துவமனை சென்று நலம் விசாரித்தனர். அப்போது அமைச்சர் துரைமுருகன் உடன் இருந்தார்.
முன்னதாக, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சில நாட்கள் முன் வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மூளையிலுள்ள ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு துரை தயாநிதிக்கு அறுவை சிகிச்சை செய்ததாகவும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“