சர்வதேச செஸ் போட்டியான செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் இன்று (ஜூலை 28) தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியைத் தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது. 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் வாய்ப்பை மாநில அரசுகளில் தமிழகம் பெற்றது. 187 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்கின்றன.
தமிழக அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. செய்தி மக்கள் தொடர்புத்துறை மக்களிடையே செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டன. செஸ் ஒலிம்பியாட்டுக்கான ‘தம்பி’ சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் செஸ் ஒலிம்பியாட் பாடல் வெளியிடப்பட்டது.
இந்தநிலையில் நேற்று (ஜூலை 28) மாமல்லபுரத்தில் போட்டி ஏற்பாடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். மாமல்லபுரத்தின் நுழைவாயிலில் 45 அடி உயர சிற்பக் கலைத் தூண் அரசுக்குச் சொந்தமான பூம்புகார் (தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகம்) கைவினை கலைஞர்களால் செதுக்கப்பட்ட தூணை ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடவுள்ள வீரர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி, வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil