மாஸ் ஒர்க் அவுட் செய்யும் முதல்வர் ஸ்டாலின் - வைரலாகும் வீடியோ!
Tamilnadu chief minister mk stalin latest Tamil News: முதல்வர் ஸ்டாலின் மிகவும் சுறுசுறுப்பாக நாட்டு நடப்பை தெரிந்து கொண்டே உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.
TN CM MK Stalin news in tamil: உடலை ஆரோக்கியமாக மற்றும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் முதல்வர் முக ஸ்டாலின் எப்போதுமே தொடர்ந்து ஆர்வம் காட்டி வருபவர். அதிலும் குறிப்பாக சைக்கிள் ஓட்டுவது, ஜிம்மில் ஒர்கவுட் செய்வது போன்றவற்றில் அவருக்கு அலாதி பிரியம். தவிர, தனது வீட்டிலேயே வாடிக்கையாக உடற்பயிற்சி செய்து வருகிறார். மேலும், நடைபயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சியிலும் அவர் ஈடுபடுவது வழக்கம்.
Advertisment
தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் கொரோனா தடுப்பு மற்றும் நிர்வாகப் பணிகளில் முழு வீச்சில் செயல்பட்டு வந்த முதலமைச்சர் முக ஸ்டாலின், தற்போது தொற்று குறைந்து வரும் நிலையில், தினமும் உடற்பயிற்சி செய்து வருகிறார்.
முதல்வர் ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி இணைய பக்கங்களில் அதிகம் பகிரப்படும். இந்த நிலையில் தற்போது ஜிம்மில் அவர் ஒர்க் அவுட் செய்யும் 4 வீடியோக்கள் வெளிவந்துள்ளன.
68 வயதான முதல்வர் ஸ்டாலின் இந்த வீடியோக்களில் மிகவும் சுறுசுறுப்பாக நாட்டு நடப்பை தெரிந்து கொண்டே உடற்பயிற்சி மேற்கொள்கிறார். இணைய பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.