CM Stalin rides government bus and asks peoples opinion: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் பயணம் செய்து பயணிகளுடன் கலந்துரையாடினார்.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின், சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் பேருந்து எண் 29-சியில் பயணம் செய்து பயணிகளிடம் கலந்துரையாடினார். குறிப்பாக பெண் பயணிகளிடம் பேசிய, அவர் அவர்களுக்கான இலவச பயண வசதி குறித்து கேட்டறிந்தார்.
பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் என்பது 2021 ஏப்ரலில் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திமுக அளித்த தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதியாகும்.
ஸ்டாலின் தனது அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து சென்னை மெரினாவில் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் தனது அரசின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாநில சட்டப்பேரவையில் மக்கள் நலன் தொடர்பான அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1-5 வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் சத்தான காலை உணவு வழங்கப்படும். மக்களின் மருத்துவத் தேவைகளை மிகவும் திறம்பட பூர்த்தி செய்வதற்காக நகர்ப்புற மருத்துவ வசதிகள் அமைக்கப்படும் என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இந்த இரண்டும் தான் தடை; எதை சொல்கிறார் ஸ்டாலின்?
மேலும், கடந்த ஓராண்டில் பல்வேறு துறைகளில் அரசின் பல்வேறு சாதனைகளை நினைவு கூர்ந்த ஸ்டாலின், மாநிலத்தின் 'திராவிட மாடல்' வளர்ச்சியை மீண்டும் வலியுறுத்தினார்.
பின்னர் பேருந்தில் பயணம் செய்து பெண்களிடம், இலவச பயணம் குறித்து கேட்டறிந்ததை ஸ்டாலின், சட்டசபையில் பகிர்ந்துக் கொண்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil