scorecardresearch

மதுரை விழா: ஸ்டாலின் வைத்த 3 கோரிக்கைகள்; மேடையிலேயே பதில் கொடுத்த இந்திய தலைமை நீதிபதி சந்திர சூட்

உயர்நீதிமன்றம் தீர்ப்புகள் அனைத்தும் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கபட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்

உயர்நீதிமன்றம்  தீர்ப்புகள் அனைத்தும் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கபட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

மதுரையில் ரூ.166 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டங்களுக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரஜிஜு, உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் தரப்பில் 3 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ’உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த நாட்டிற்குமானது. இணையவழி மூலமாக நீதிபதி டெல்லியில் இருக்கும் வழக்கறிஞர்கள் எங்கிருந்தும் வாதிட முடியும். நீதிமன்ற செயல்பாடுகளை நேரலை செய்வதன் மூலமாக சட்ட கல்லூரி மாணவர்களும் கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும். உயர்நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.  சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிட ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும் ” என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த கோரிக்கைகளை  சி.ஐ.ஜி மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் பரிசீலனை செய்வார்கள் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.  

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Cm stalin three needs from judges virtual hearing