scorecardresearch

கள ஆய்வில்  முதலமைச்சர் திட்டம் : இந்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு

”கள ஆய்வில் முதலமைச்சர் ” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர் மண்டபத்தில் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

கள ஆய்வில்  முதலமைச்சர் திட்டம் : இந்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு

”கள ஆய்வில்  முதலமைச்சர் ” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து,  முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர் மண்டபத்தில் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். 

தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்களுக்காகத்தான் அரசு. மக்களை  மையப்படுத்தி இயங்குவது நல்லரசு. அரசு  அலுவலங்கள், மருத்துவமனை நாடி வரும்  மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. .அதை உறுதிப்படுத்த  நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்” என ஏற்கனவே தெரிவித்திருந்தார்கள். மேலும், கள ஆய்வுகளின் முக்கியத்துவத்தை பல்வேறு அரசுத் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டங்களிலும் வலியுறுத்தி வந்துள்ளார்கள்.

அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் “கள ஆய்வு முதலமைச்சர்”  என புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி,  அதன்படி முதல்வர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும்,  வரும் பிப்ரவரி 1  மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்களில் வேலூர், ராணிப்பேட்டை, திருபத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து  விரிவாக மேற்கொள்ளவுள்ளார்கள்.

ஆய்வின் முதல் நாளான பிப்ரவரி 1 ஆம் தேதியன்று முதலமைச்சர், அப்பகுதிகளில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில் அமைப்புகளின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் கேட்டறிகிறார்கள்.  அன்று மாலை,  நான்கு மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர்கள்,  காவல்துறை சரக துணைத்தலைவர், காவல்துறைத் தலைவர்  ஆகியோருடன்  மேற்படி மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வு மேற்கொள்வார்.

அன்றைய தினத்தில்,  இந்த ஆய்வின் மற்றொரு பகுதியாக,  அமைச்சர்கள், வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் முக்கியத் துறைகளைச் சார்ந்த அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் ஆகியோர் மேற்கண்ட நான்கு மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்வார்கள்.

கள ஆய்வில்  கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில்,  திட்டச் செயல்பாடுகள் குறித்து பிப்ரவரி 2ஆம் நாள் நடைபெறும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பங்குபெறும் ஆய்வுக் கூட்டத்தின் போது முதல்வர் முன்னிலையில் இப்பொருண்மைகள் குறித்து விவாதிக்கப்படும். 

இந்த ஆய்வுக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர், முக்கிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைத் தலைவர்கள் முன்னிலையில் சமந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உள்ளிட்ட மாவட்ட உயர் அலுவலர்களுடன், முதலைமைச்சர்  விரிவான ஆய்வினை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Cm stalin to do special visit new scheme tn govt