கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.
டெல்லியிலிருந்து சென்னை திரும்பியதும், மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்று. முதலமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது நெல்லை, கன்னியகுமரி, தூத்துகுடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள், பால் விநியோக, மீட்பு பணிகள் தொடர்பாக கேட்டறிந்தார். தாமிரபரணி ஆறு மற்றும் அணைகளில் உள்ள நீர் இருப்பு பற்றியும். மீட்பு பணிகள் குறித்தும் ஸ்டாலிடம் அதிகாரிகள் விளக்கினர். பெரும் மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார் முன்னதாக டெல்லி சென்றிருந்த அவர் பிரதமர் மோடியை சந்தித்தார்.
அப்போது மிக்ஜம் புயல் பாதிப்பு: தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.7,033 கோடியும், நிரந்தர நிவாரணத் தொகை: ரூ.12,659 கோடி வழங்க வேண்டும் என்றும், தென் மாவட்ட மழை பாதிப்பு: தற்காலிக சீரமைப்புப் பணிக்கு ரூ.2,000 கோடியும் மொத்தம்: ரூ.21,692 கோடி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“