Advertisment

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து

உலக கோப்பை செஸ் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தாவுக்கு முதலவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
Aug 22, 2023 09:14 IST
mk stalin1

CM MK Stalin

உலக கோப்பை செஸ் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தாவுக்கு முதலவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு தமிழக வீரர் பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார். அரையிறுதியில் உலகின் 3ம் நிலை வீரரான ஃபேபியானோவை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தினார்.

அரையிறுதியில் 2 போட்டிகள் சமனான நிலையில் டை பிரேக்கர் சுற்றில் வெற்றி பெற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதில், நம்பர் ஒன் வீரர் கார்ல்சனுடன், இவர் மோத உள்ளார்.

இந்நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில், “ செஸ் உலகக்கோப்பை போட்டியில் தங்களின் அபாரமான செயல்திறனுக்காக தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு  மனமார்ந்த வாழ்த்துகள். இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருப்பதற்கும் எனது வாழ்த்துகள். ” என்று அவர் தெரிவித்துள்ளார்.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment