Advertisment

ஆறிலிருந்து அறுபதுவரை... ரஜினிக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து

ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரஜினிகாந்த்

ரஜினி பிறந்த நாள் வாழ்த்து

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 74-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களும் அவரது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் அவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் - ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

Advertisment

 

திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன்” என்று வாழ்த்தியுள்ளார்.

Advertisment
Advertisement

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ”தன் தனித்துவமான நடிப்பாற்றலால் உலகளாவிய ரசிகர் பட்டாளம் கொண்டவரும், என்றும் பழகுவதற்கு இனியவருமான அன்பு நண்பர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையுலக வாழ்வில் பொன்விழா ஆண்டில் உள்ள அன்பு நண்பர் திரு. ரஜினிகாந்த் அவர்கள், இன்னும் பல்லாண்டு பூரண உடல் நலத்துடன் ரசிகர்களை மென்மேலும் மகிழ்விக்க வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்தியுள்ளார்.

"எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது கடும் உழைப்பாலும், மேன்மையான பண்புகளாலும், இந்தியத் திரையுலகின் அடையாளங்களில் ஒருவராக உயர்ந்திருக்கும், அன்புக்கும் மரியாதைக்கும் உரிய, சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, மூன்று தலைமுறைகளை, தனது வசீகரத்தால் கட்டிப் போட்டிருக்கும் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள், மேலும் பல்லாண்டுகள் நலமுடன் ஆரோக்கியத்துடன் வாழ, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.

"பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.

”என் அன்பு நண்பரே, பழம்பெரும் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! அவர் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் அவரது அனைத்து முயற்சிகளிலும் தொடர்ந்து வெற்றி பெறட்டும்” என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்தியுள்ளார்.

”சகோதரர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என பா.ஜ.க மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.

அன்பு நண்பர், சூப்பர் ஸ்டார் ராஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிகள் பெறுக; நலம் சூழ்க; மகிழ்ச்சி நிறைக; நீடு வாழ்க என வாழ்த்தி நடிகர் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

”நடிகர் நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் இன்று 75-ஆம் பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

”மதிப்பிற்குரிய ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! கேப்டன் அவர்களும், ரஜினிகாந்த் அவர்களும் சினிமா துறையில் பல ஆண்டுகளாக நண்பர்களாகப் பயணித்தவர்கள். அது மட்டும் இல்லாது, நல்ல குடும்ப நண்பராகவும் இருந்திருக்கிறார். இன்று பிறந்தநாள் காணும் அவர் நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல் நலத்துடனும், இன்னும் பல ஆண்டுகள் கலைத்துறைக்கு சேவை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன், எல்லா நலமும் வளமும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

”ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. சூப்பர்ஸ்டார்.. ” என்று நடிகர் தனுஷ் வாழ்த்தியுள்ளார்.

"நட்புனா என்னனு தெரியுமா உனக்கு? நண்பனா என்னனு தெரியுமா உனக்கு?" நடிகர் ரஜினி பிறந்தநாளுக்கு நடிகர் மம்மூட்டி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேபோல இயக்குநர்கள் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cm Mk Stalin Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment