/tamil-ie/media/media_files/uploads/2020/09/New-Project-2020-09-02T144707.982.jpg)
Tamil Nadu news today live updates
CMBT at Koyambedu cmbt reopen : கோயம்பேடுவில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரும் செப் 7 ஆம் தேதி, சுமார் 5 மாதங்களுக்கு பிறகு திறக்கப்படவுள்ளது.
தமிழக அரசு வரும் செப்டம்பர் 7 முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் புறநகர் பேருந்துகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகின்றன. பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படும். பின்பு அவர்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு பஸ்ஸிலும் மொத்தம் 52 பேர் அமரக்கூடிய திறனுக்கு எதிராக 32 பயணிகளை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். மூன்று இருக்கைகளில் உள்ள நடுத்தர இருக்கைகள் காலியாகவே இருக்கும், இரண்டு இருக்கைகளில் ஒருவர் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவார்.
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து, முதல் நாளில் அனைத்து வடக்கு மாவட்டங்களையும் உள்ளடக்கிய 1660 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. "ஏர் கண்டிஷனிங் பேருந்துகள் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு இயக்கப்படாது" என்று மாநில போக்குவரத்து நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு, தினமும் சராசரியாக 1.5 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டு வந்தனர். அவர்கள் 2,000 பேருந்துகளில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்தனர்.
இதற்கிடையில், எம்.எம்.பி.டி.யில் அமைக்கப்பட்ட தற்காலிக பழ சந்தை கோயம்பேடு மொத்த சந்தை வளாகத்திற்கு மாற்றப்படும் வரை, ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம் மற்றும் டி.என்.எஸ்.டி.சி, சி.எம்.பி.டி.யில் இருந்து இயக்கப்படும். எம்.எம்.பி.டி.யை பராமரிக்கும் சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் (சி.எம்.டி.ஏ) இதற்கான தேதியை முடிவு செய்யவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.