சென்னை தாம்பரம் மாநகராட்சி எல்லைக்கு அப்பால் உள்ள, வரதராஜபுரத்தில் வெளிவட்ட சாலையில் தனியார் பேருந்து முனையத்தை உருவாக்க முடிவு செய்துள்ளனர்.
சென்னையின் பொதுப் பேருந்து போக்குவரத்து மையமான கோயம்பேட்டில் உபயோகிக்கும் மக்களின் நெரிசலைக் குறைக்க சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் திட்டமிட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருக்கும் முனையம் வரதராஜபுரத்திற்கு மாற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும்.
கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் தனியார் பேருந்து நிலையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அறிய, இன்று ஐந்து ஏக்கர் இடத்தை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று சி.எம்.டி.ஏ. அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
குடியிருப்பு பகுதியாக வளர்ந்து வரும் வரதராஜபுரம், டெர்மினஸ் அமையும் பட்சத்தில் வணிக வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு இடம் கிடைக்கும் என்றும், பயணிகள் தனியார் பஸ்களில் கிளம்பாக்கத்தில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளிவட்டச் சாலையில் உள்ள 50 மீட்டர் நிலப்பரப்பில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி முதற்கட்டமாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முனையத்திற்காக அடையாளம் காணப்பட்ட நிலம் தற்போது வணிக நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைத்து, சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து வெளிவட்டச் சாலைக்கான அணுகலை மேம்படுத்த, பஞ்சாயத்து பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சுங்கக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அங்கு வசிக்கும் மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
வரதராஜபுரம் பொதுநல சங்க கூட்டமைப்பு தலைவர் வி.ராஜசேகரன் கூறியதாவது: “பஸ் ஸ்டாண்ட் பணியை மேற்கொள்ளும் முன், குடிமை கட்டமைப்பு வசதிகள் குறித்த பகுதிவாசிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். சிறந்த சாலைகள், பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம், வடிகால் பணியை முடிக்கவும், வரதராஜபுரத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் டிப்போ மற்றும் தாம்பரம் வரை மினி பஸ் சேவைகளை அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்”, என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil