கிளாம்பாக்கம் பேருந்து முனைய டெண்டர் ரகசிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக சி.எம்.டி.ஏ நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனைய பணிகளுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பான ரகசிய தகவல்களை ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனத்திற்கு சி.எம்.டி.ஏ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மூலம் அனுப்பியதாகத் தெரிகிறது.
சிறிது நேரத்திலே சி.எம்.டி.ஏ தரப்பில் அனுப்பிய மின்னஞ்சல், மற்றொரு நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த சி.எம்.டி.ஏ அதிகாரிகள் துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் தொழிநுட்ப உதவியாளர்கள் பிரவீன்குமார் மற்றும் விவேக் மீது சி.எம்.டி.ஏ துணை பொறியாளர் பாலமுருகன் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தொடர்ச்சியாக டெண்டர் தொடர்பான முக்கிய தகவல்களை வேறு ஒரு மின்னஞ்சலுக்கு அனுப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சி.எம்.டி.ஏ தகவல்களை இன்னொரு மெயிலுக்கு அனுப்பிய நபர்கள் யார் என்பது குறித்தும், சி.எம்.டி.ஏ மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டதா என்பது குறித்தும் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“