சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சி.எம்.டி.ஏ.,) அதிகாரிகள், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்.,) க்கு மெட்ரோ ரயில்களில் க்யூ.ஆர்., பதிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை ஒட்டுமாறு கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளனர்.
புதிதாக பதிக்கப்படும் கியூ.ஆர்., குறியீட்டை பயணிகள் ஸ்கேன் செய்த பின்னர் 14 கேள்விகளின் தொகுப்பிற்கு பதிலளிக்க வேண்டும்.
அதாவது வீட்டு வகை, பொழுதுபோக்கு, சுற்றுச்சூழல், பொருளாதாரம், முதலீட்டு ஈர்ப்பு மற்றும் நகரத்தின் பார்வை போன்ற பல்வேறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் அதிகாரிகள், சென்னை பெருநகரப் பகுதியின் பார்வை கணக்கெடுப்பு ஆய்வை, கடற்கரை மால்களிலும் வலைத்தளங்களிலும் நடத்தி வருகின்றனர். இன்றைய நிலவரப்படி, 30,000 க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.
"சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் ஒப்புக்கொண்டவுடன், நாங்கள் மெட்ரோ ரயில்களில் கியூ.ஆர்., குறியீடு ஸ்டிக்கர்களை ஒட்டுவோம். இந்த பயிற்சியில் பொதுமக்கள் பங்கேற்பது இன்றியமையாதது". என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னை பெருநகரப் பகுதியின் மூன்றாவது பேஸ் (2026- 2046) , 1189 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மெட்ரோ கட்ட திட்டம் மேற்கொண்டுள்ளது. இதற்கான மக்களின் கருத்துக்களை இந்த ஆய்வின் மூலம் பெற ஆணையம் முடிவெடுத்துள்ளது.
முதல் விரிவான திட்டம் 1976 இல் தயாரிக்கப்பட்டது, இரண்டாவது திட்டம் 2008 இல் தயாரிக்கப்பட்டது. முந்தைய திட்டங்களின் அடிப்படையில் பல்வேறு பொருள்கள் செயல்படுத்தப்படுகின்றன. முன்னதாக, அதிகாரிகள் மட்டத்தில் மட்டுமே திட்டமிடப்பட்ட திட்டங்கள், இப்போது மெரினா கடற்கரை, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், கல்வி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் போன்ற இடங்களில் பொதுமக்களிடம் நேரடியாக கருத்துக்களைப் பெறுவதற்கான முயற்சிகளை CMDA தொடங்கியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil