225 மெட்ரிக் டன் எடையுடன் உருவாக்கப்பட்ட இந்த யு-கிர்டர், ஒரு முக்கியமான பொறியியல் சாதனையாகவும் மற்றும் கட்டுமான குழுவின் தொழில்நுட்ப திறன், புதுமை மற்றும் செயல்படுத்தும் திறன்களுக்கு ஒரு முக்கிய சான்றாகவும் உள்ளது. பொதுவாக போக்குவரத்து சந்திப்புகள் மற்றும் யு-டர்ன் பகுதிகளில், எதிர்கால போக்குவரத்து தேவைகளைக் கருத்தில் கொண்டு நீளமான ஸ்டீல் கர்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், எல்&டி தலைமை அலுவலகம் முன்பு அமைந்துள்ள இந்த இடத்தில், ஸ்டீலுக்கு பதிலாக நீளமான யு-கிர்டரை பயன்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், இந்திய மெட்ரோக்களில் இதுவே மிகவும் நீளமான யு-கிர்டர் ஆகும். மேலும், இது அழகியல் ரீதியாகவும் சிறப்பாக அமைந்துள்ளது .
இந்த முயற்சியின் முக்கிய சவால்கள் யு-கிர்டர்க்காண அச்சுகள் வடிவமைத்தல், அவை பாதுகாப்பாக கொண்டு செல்லுதல் மற்றும் துல்லியமாக நிறுவுவது ஆகியவையாகும். இந்தப் பணி 3 ஸ்பான்களிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது, ஒவ்வொரு ஸ்பானிலும் 2 கிர்டர்கள் நிறுவப்பட்டன. மொத்தமாக 33.33 மீட்டர் நீளமுள்ள 6 யு-கிர்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் செயல்திறன், வடிவமைப்பு மற்றும் சிறப்பையும் வெளிப்படுத்துகிறது.