Advertisment

தமிழகத்தில் 42 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் திட்டம்: ரூ.61,843 கோடிக்கு நிதிஒதுக்கீடு

இந்த திட்ட செலவு ரூ.89,000 கோடி செலவில் இருந்து ரூ.61.843 கோடிக்கு குறையும் என்ற எண்ணத்தில் பரிந்துரை செய்தனர்.

author-image
WebDesk
New Update
chennai metro

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இயங்கப்படும் 42 ஓட்டுநர் இல்லாத ரயில்களை செயல்படுத்த தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பதால், இந்த வசதியை குத்தகைக்கு எடுக்கும் திட்டம் தோல்வியடைந்துள்ளது.

Advertisment

சென்னை மெட்ரோவின் 42 ரயில்களை குத்தகைக்கு விட்டால், இந்த திட்ட செலவு ரூ.89,000 கோடி செலவில் இருந்து ரூ.61.843 கோடிக்கு குறையும் என்ற எண்ணத்தில் பரிந்துரை செய்தனர்.

குத்தகைக் காலம் முடிந்த பிறகு வேறு இடங்களில் மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்த முடியாது என்பதால், மெட்ரோ ரயில்களை நிறுவனங்கள் குத்தகைக்கு விடும் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ரத்து செய்துள்ளது.

சென்னை மெட்ரோ நிறுவனம் ஆனது, 118.9 கிலோமீட்டருக்கு கட்டம்-2 திட்டத்தில், 138 மூன்று- கேன் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது, இது 2026 இல் பொதுமக்களுக்காக திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்கள் ஏன் குத்தகைக்கு விடப்படவில்லை என்பதைக் கண்டறிய உலகெங்கிலும் உள்ள ரயில் உற்பத்தியாளர்களுடனான சந்திப்பில் பேசினர்.

அதில் தெரியவந்தது என்னவென்றால், மெட்ரோ ரயில்கள் ஒரு நகரம் அல்லது ஒரு வழித்தடத்திற்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், அவற்றை குத்தகைக்கு எடுக்கும் நிறுவனங்கள் அவற்றை திரும்பப் பெற்று வேறு இடங்களில் பயன்படுத்த முடியாது என்பது தெரியவந்தது.

இருப்பினும், நீண்ட தூர ரயில்கள் மற்றும் ரயில்வேயால் இயக்கப்படும் புறநகர் ரயில்கள் குத்தகைக்கு விடப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Chennai Metro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment