scorecardresearch

பஸ், ரயில், மெட்ரோவுக்கு ஒரே அட்டை: சிங்கார சென்னை கார்டை ஆன்லைனில் பெறுவது எப்படி?

சென்னையில் பொதுப்போக்குவரத்து ஊர்திகளான பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ஆகிய மூன்றிற்கும் பயணசீட்டாக ஒரே கார்டை பயன்படுத்தலாம்.

chennai metro
Source: Twitter/@cmrlofficial

சென்னையில் போக்குவரத்து பயணங்களை மக்களுக்கு எளிமையாக்க, சிங்காரச்சென்னை அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தினமும் பணிக்கு செல்லும்போது மெட்ரோ, ரயில், பேருந்து என ஒவ்வொரு இடத்திலும் பயணசீட்டு பெற காத்திருந்து நேரத்தை வீணடிக்க அவசியம் இல்லை என்பதால், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கிறது.

சென்னையில் பொதுப்போக்குவரத்து ஊர்திகளான பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ஆகிய மூன்றிற்கும் பயணசீட்டாக ஒரே கார்டை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டம் நேற்று மக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகம் படுத்தப்பட்டுள்ளதால், தற்போதைக்கு இந்த சென்னை கார்டை மெட்ரோவில் பயணம் செய்ய மட்டுமே பயன்படுத்த இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கார்டு வசதியை, புறநகர் பகுதிகளுக்கு பயணிக்கும் மின்சார ரயில்களில் அறிமுகம் செய்ய இரண்டு மாதங்கள் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சென்னை மாநகரப் பேருந்துகளில் இந்த வசதியை கொண்டுவர 10 மாதங்கள் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு பயன்பாட்டிற்கு இந்த சென்னை கார்டு கொண்டுவந்த பின்பு, குறிப்பிட்ட தொகையைக் கொண்டு ரீசார்ஜ் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்பிறகு, சென்னையில் பொதுப்போக்குவரது ஊர்திகளை பயன்படுத்தும்பொழுது, வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மெஷினில் ஸ்வைப் செய்தால், அந்த குறிப்பிட்ட பயணத்திற்கான கட்டணம் கார்டில் இருந்து கழிக்கப்படும்.

மேலும், நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட சிங்கார சென்னை கார்டை டெபிட் கார்டு ஆகவும் பயன்படுத்த இயலும் என்றும் தெரிவித்துள்ளனர்.

சிங்கார சென்னை கார்டு பெற, மக்கள் மேற்கொள்ள வேண்டியவை:

  1. இந்த சிங்கார சென்னை கார்டை பெற, https://transit.sbi/swift-eform/custCardLink?cardLink=cmrl என்ற இணையப் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அந்த பக்கத்தில் முதலில் உங்களுடைய பெயர், உங்களுடைய மொபைல் எண், பிறந்த தேதி, பான் அட்டை எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
  3. பின்னர் உங்களுடைய ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகிய அடையாள அட்டைகளில் ஏதேனினும் ஒன்றை தேர்வு செய்து, அதன் விவரத்தை பதிவிட வேண்டும்.
  4. பயணியின் விவரங்கள் வழங்கியதும், ‘Submit’ கொடுத்தால், உங்களுடைய சிங்கார சென்னை அடையாள அட்டையின் விண்ணப்பம் பதிவு செய்யப்படும்.

ஸ்டேட் பேங்க் அப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் இதனை டெபிட் கார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அட்டைக்கு தற்போது மாதாந்திர கட்டணம் எவ்வளவு என்பது நிர்ணயிக்கப்படவில்லை, மேலும் பயணிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த சிங்கார சென்னை அட்டையை மும்பை, பெங்களூரு, டெல்லி உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோக்களிலும் பயன்படுத்த முடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Cmrl singara chennai card details and procedure to register