New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/21/jx85tDqrnsqxWtwJ8bLN.jpg)
சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு: 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு
மெட்ரோ ரயில் சேவைகளை 2 வழித்தடங்களில் நீட்டிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களை வெளியிட்டுள்ளது. இதில் கலங்கரை விளக்கம் முதல் ஐகோர்ட் வரையிலும், தாம்பரம்-கிண்டி-வேளச்சேரி வழித்தடமும் அடங்கும்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு: 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு
மெட்ரோ ரயில் சேவைகளை 2 வழித்தடங்களில் நீட்டிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) விரிவான திட்ட அறிக்கைகளை (DPRs) தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களை வெளியிட்டுள்ளது. இதில் கலங்கரை விளக்கம் முதல் ஐகோர்ட் வரையிலும், தாம்பரம்-கிண்டி-வேளச்சேரி வழித்தடமும் அடங்கும்.
CMRL அறிவிப்பின்படி, கலங்கரை விளக்கம் முதல் ஐகோர்ட் வரையிலான 7 கி.மீ. தூர நீட்டிப்பு, மெரினா கடற்கரை மற்றும் தலைமைச் செயலக பகுதிக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தும். தாம்பரம்-கிண்டி-வேளச்சேரி வழித்தடமானது, 21 கி.மீ. தூரத்துக்கு நீட்டிக்கப்பட உள்ளது. இந்த வழித்தடம், தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற பகுதிகளை கிண்டி மெட்ரோவுடன் (தண்டையார்பேட்டை-சென்னை விமான நிலையம் மெட்ரோ வழித்தடம்) இணைக்கும். இதில் தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி, மற்றும் கிண்டி ஆகிய இடங்களில் பல போக்குவரத்து அமைப்புகளுக்கான இணைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரிக்கும் ஒப்பந்தம், 'Systra MVA Consulting India' நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கம்-ஐகோர்ட் வழித்தடத்திற்கு ரூ.38.20 லட்சமும், தாம்பரம்-கிண்டி-வேளச்சேரி வழித்தடத்திற்கு ரூ.96.19 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை முடிப்பதற்கு 120 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
"இந்த விரிவான திட்ட அறிக்கைகள், வழித்தட விருப்பங்கள், பயணிகளின் எண்ணிக்கை, போக்குவரத்து ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை ஆராய்ந்து, எதிர்கால திட்ட அமலாக்கத்திற்கான முடிவுகளை எடுக்க உதவும்" என்று அந்த செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.
இதற்கிடையில், பெருநகர சென்னை மாநகராட்சி (GCC), சர்தார் படேல் சாலை-வேளச்சேரி பிரதான சாலை சந்திப்பு வரை 3 கி.மீ. நீளத்திற்கு 3 வழித்தடங்கள் கொண்ட மேம்பாலம் கட்ட முன்மொழிந்துள்ளது. இந்த மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டுக்கு வரும்போது, ரேஸ் கோர்ஸ் சாலை, ஃபைவ் ஃபர்லாங் சாலை, வேளச்சேரி பைபாஸ் சந்திப்பு, வேளச்சேரி பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.