தேவகோட்டை அருகே நாகாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காவலாளியை கொடூரமாக தாக்கி கொலை முயற்சி ரோந்து வந்த சார்பு ஆய்வாளர் மாணிக்கம் வந்ததால் பல கோடி மதிப்பிலான தங்க நகைகள் தப்பியது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பாவனாகோட்டை கிராமத்தில் சருகனி தேவகோட்டை சாலையில் நாகாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மூலம் இப்பகுதி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் வங்கியில் விவசாய கடனுக்காக தங்க நகைகளை அடமானம் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (ஜூன் 2) இரவு வேலாயுதப்பட்டினம் சார்பு ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் முதல் நிலை காவலர் ராகேஷ் ரோந்து பணியில் வரும் பொழுது வழக்கமாக வங்கியின் காவலாளிடம் இரவு கையெழுத்து வாங்குவதை வழக்கமாகக் உள்ளபோது நேற்று இரவு கையெழுத்து வாங்க பொன்னத்தி கிராமத்தைச் சேர்ந்த காவலாளியை ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பூமிநாதன் (65) தேடி உள்ளனர். அப்பொழுது சந்தேகத்துக்கு இடமாக வங்கியின் முன் பகுதியில் உள்ள கேமரா உடைந்த நிலையில் உள்ளதால் உடனே சார்பு ஆய்வாளர் மாணிக்கம் வங்கியே சுற்றி தேடி உள்ளார் அப்பொழுது வங்கியின் அருகே முட்புதரில் காவலாளி பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார்.
இச்சம்பவம் அறிந்த துணைக் கண்காணிப்பாளர் பார்த்திபன் உடனே சம்பவ இடத்திற்கு வந்து காவலாளியை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். வங்கியில் உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் வைத்திருந்த லாக்கர் பகுதியில் உள்ள சுவற்றில் உடைக்க முயற்சி செய்து உள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில் காவலாளி நேற்று வழக்கமாக மாலை வங்கிக்கு வந்து கதவை திறந்து உள்ளார் அப்பொழுது பின்புறமாக வந்து காவலாளியை கொடூரமாக தாக்கி உள்ளனர். பின்னர் கண்விழித்து பார்த்த போது போலீசார் நின்றதாக கூறினார்.
மாவட்ட கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
கொள்ளையர்கள் வங்கி உள்ள சிசிடிவி கேமராக்களை உடைத்து பின்னர் வங்கியில் உள்ள ஹார்ட் டிஸ்கையும் எடுத்துச் சென்று உள்ளனர்.
மேலும் சிவகங்கை இருந்து தடவியல் நிபுணர் குழுவினர் வங்கியில் கைரேகைகளை சேகரித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து பைரவி வரவழைக்கப்பட்டு வங்கியில் சுற்றி மோப்பம் எடுத்து அருகே உள்ள பேருந்து நிறுத்தம் வரை சென்றது.
குற்றவாளிகளின் முக்கிய தடயங்கள் கிடைத்ததாகவும் இதனால் விரைவில் குற்றவாளிகளை விடுபடுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்தி: சக்திசரவணக்குமார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.