அடடே... அப்படியா?! ‘மிஸ்டர் பணிவு’ சாயத்தை வெளுத்த நிலக்கரி!

இரண்டு மூத்த அமைச்சர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். கார்டனில் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் ’பவர்’ குறைக்கப்பட்டது.

இரண்டு நாட்களுக்கு முன்பு அனைத்து தினசரிகளிலும் நிலக்கரி இறக்குமதியில் முறைகேட்டில் ஈடுபாட்ட, தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனம் மீது டெல்லியில் வழக்குப் பதிவு செய்ததாக செய்திகள் வந்தது. இந்த செய்தியை சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது என்று விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். இந்த நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக, வருவாய் புலனாய்வு துறை, 2013ம் ஆண்டே 333 கோடி முறைகேடு செய்ததாக அறிக்கை கொடுத்ததாம். அதை வைத்துதான் இப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்போது வழக்கில் சிக்கிய இந்த நிறுவனம் தான், தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை பல ஆண்டுகளாக சப்ளை செய்து வருகிறது. மத்திய வருவாய் புலனாய்வு துறை அறிக்கையின் விபரம் 2015 ஆண்டு இறுதியில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இரண்டு மூத்த அமைச்சர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். கார்டனில் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதன் பின்னர் சம்பந்தப்பட்ட அந்த அமைச்சர்களின் ’பவர்’ குறைக்கப்பட்டது. தேர்தலின் போது ஒரு அமைச்சரின் தொகுதி மாற்றி கொடுக்கப்பட்டது. அவரும் தோல்வி அடைந்தார். ஆனால், இன்னொரு அமைச்சர் இப்போதும் அதிகாரத்தில் இருக்கிறார்.  ‘மிஸ்டர் பணிவு’  மீது மத்திய அரசுக்கு பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால், அவரால் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை. ஆனாலும் அவர் அப்பழுக்கில்லாதவர் என்று நம்பினார்கள். வருவாய் புலனாய்வு துறையின் அறிக்கையை படித்த பின்னர் அவர் மீதான நம்பிக்கை சுத்தமாக போய்விட்டதாம்.

இதன் காரணமாகதான், சமீபத்தில் டெல்லிக்கு சென்ற அவரை பிரதமர் சந்திக்க மறுத்துவிட்டாராம். வாரத்தில் மூன்று முறை சகஜமாக பிரதமரை சந்தித்து வந்த அவருக்கு, இப்போது வழக்குப் போட்டப்பட்டிருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியாம். டெல்லி சிபிஐ தொடர்ந்துள்ள இந்த வழக்கில் பதவியில் இருப்பவருக்கும், பதவியில் இல்லாதவருக்கும் பிரச்னை வரலாம். அப்படியொரு சூழல் வந்தால், தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழும் என்பது டெல்லி வாலாக்களின் கணிப்பு.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close