Advertisment

நடுக்கடலில் வீசப்பட்ட ரூ.20 கோடி தங்கம்: நீரில் குதித்து மீட்ட ஸ்கூபா டைவிங் வீரர்கள்!

இந்திய கடலோர காவல்படை மற்றும் வருவாய் புலனாய்வு மற்றும் சுங்க இயக்குனரகம் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.

author-image
WebDesk
Jun 01, 2023 22:57 IST
Coast Guard Foils Bid To Smuggle Gold Worth Rs 20 Crore From Sri Lanka

மீட்கப்பட்ட ரூ.20 கோடி கடத்தல் தங்கம்

தமிழகத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் 2 மீன்பிடி படகுகளில் இருந்து சுமார் 20.2 கோடி ரூபாய் மதிப்புள்ள 32.689 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வியாழக்கிழமை (ஜூன் 1) பறிமுதல் செய்தனர்.

Advertisment

இந்த சரக்கு இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய கடலோர காவல்படை மற்றும் வருவாய் புலனாய்வு மற்றும் சுங்க இயக்குனரகம் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.

இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்து சுமார் 20.2 கோடி ரூபாய் மதிப்பிலான 32.689 கிலோ தங்கத்தை கைப்பற்ற இந்திய கடலோர காவல்படையினர், டிஆர்ஐ அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறையினருடன் இணைந்து சிறப்பு நடவடிக்கையை எவ்வாறு மேற்கொண்டனர்.

,

ஒரு கட்டத்தில் கடத்தல்காரர்கள் தங்கத்தை கடலில் வீசியுள்ளனர். இந்த நிலையில் அதிகாரிகள் ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் தங்கத்தை மீட்டுள்ளனர்.

இதையடுத்து போலீசார் படகில் இருந்த நாசர், ஹமீது, ரவி உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Gold #Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment